Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


மத்திய கிழக்குப் போரில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் ஈரானிய தூதரகத்திற்குச் சென்றார்


2026-03-04 14923

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பிற்பகல் இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று இலங்கைக்கான ஈரானிய தூதுவரைச் சந்தித்தார்.

ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் குவைட் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்சமயம் நடந்து வரும் போர் சூழலால் உயிரிழந்த மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்தார்.

இந்த மோதல்கள் முடிவுக்கு வந்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதியும் சமாதானமும் நிலவட்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு பிரார்த்தித்தார்.

Advertiesment